Pages

Saturday, March 16, 2013

ஐக்கிய அமெரிக்காவினால் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டாவது பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது!

Saturday, March 16, 2013
புதுடில்லி::ஐக்கிய அமெரிக்காவினால் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டாவது பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் தகவல் ஒன்றை மேற்கோள்காட்டி ஆங்கி ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இந்த முறை தாக்கல் செய்த பிரேரணையின், சீர்த்திருத்தத்தின் பின்னரான இறுதி வடிவம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் இந்தியா தமது நிலைப்பாட்டினை இன்னும் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தவில்லை.

எனினும் நேற்றைய தினம் இது தொடர்பில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும் கடந்த தடவையை போன்றே இந்த முறையும் அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்திய ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு தமிழக அரசியல் கட்சிகளும், மாணவர்களும் வலியுறுத்தி வருகின்ற நிலையிலும், மத்திய அரசாங்கம் அதனை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நான்கு வருடங்களில் இலங்கை அரசாங்கத்தின் தமிழர்கள் விடயத்திலான செயற்பாடுகளில் இந்தியா திருப்தி கொள்ளாத நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் புலிகள் மேற்கொண்ட கோர செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு தெளிவுப் படுத்தப்படும் என்று அமைச்சர் மகிந்தசமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே சர்வதேச நாடுகள் பேசி வருகின்றன.

எனினும் புலிகள் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் யாரும் பேசுவதில்லை.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கம், புலிகள் மேற்கொண்ட கோர தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு தெளிவுப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment