Friday, March 08, 2013
சென்னை::போர் குற்றம புரிந்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். லட்சகணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர். இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி லயோலா கல்லூரியை சேர்ந்த 10 மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும் அவர்கள் கண்டித்துள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். லயோலா கல்லூரிக்கு அருகே இலங்கை தூதரகம் இருப்பதால், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment