Monday, March 18, 2013

தாய்நாட்டுக்காக குரல் கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்யும் எத்தகைய தார்மீக உரிமையும் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடையாது -அமைச்சர் பசில் ராஜபக்ஷ!

Monday, March 18, 2013
இலங்கை::தாய்நாட்டுக்காக குரல் கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்யும் எத்தகைய தார்மீக உரிமையும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடையாது என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவிற்குச் சென்று தாய்நாட்டுக் காகப் பேசுவதானால் அரசாங்கத்தோடு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவ்வாறு கோருவதற்கு எதிர்க் கட்சித் தலைவருக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது எனக் குறிப்பிட்டார்.எனினும் யுத்தத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முன்வந்தமைக்குக் காரணம், மின்சார நாற்காலியிலிருந்து மக்களைப் பாது காப்பதற்காகவே எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மினுவாங்கொடையில் நிர்மா ணிக்கப்பட்டுள்ள ரெஜி ரணதுங்க வித்தியாலயத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித் துள்ளார்.
மினுவாங்கொடையில் நடை பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய போதே அமைச் சர் இவ்வாறு தெரிவித் துள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் :-

முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சகல இன, மத மக்களும் ஐக்கியமாக வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ள ஜனாதிபதியின் சார்பில் ஜெனீவா சென்று குரல் கொடுப்பதற்கு இலட்சக் கணக்கானோர் தயாராகவுள்ளபோது எதிர்க் கட்சித் தலைவர் ஒப்பந்தம் பற்றிப் பேசுவது மோசமானது.

யுத்த காலத்தில் நாட்டிலிருந்து தப்பியோடிய புலிப் பயங்கரவாதிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் ஜனாதிபதி மேற்கத்தைய நாடுகளுக்குச் செல்லும்போது பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment