Thursday, March 07, 2013
புதுடில்லி::இலங்கையில் நடந்திருப்பது, மனித உரிமை மீறல். இறையாண்மை பற்றி என்ன தான் குறிப்பிட்டாலும், அங்கு நடந்துள்ள அனைத்து சம்பவங்களுக்காக, இலங்கையிடம் கவலை தெரிவிக்க வேண்டிய நேரம், இந்தியாவுக்கு வந்துவிட்டது,'' என, பா.ஜ.,வை சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர், அருண் ஜெட்லி கூறினார்.
விவாதம்ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், ராஜ்யசபாவில் நேற்று நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பேசியதாவது:இந்தியாவைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளுடன், உறவை சரியாக கையாள வேண்டியது, மத்திய அரசின் கடமை. ஆனால், துரதிஷ்டவசமாக, அண்டை நாடுகளுடன் இந்தியாவின் உறவு சரியாக இல்லை.பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு என எல்லா நாடுகளும், இந்தியாவின் பூகோள அடிப்படையிலான, பாதுகாப்பை நிர்ணயிக்க கூடியவை. இருப்பினும், இந்த நாடுகளுடன் இந்தியாவுக்கு உள்ள உறவு, கவலையளிக்கும் வகையில் உள்ளது.
இலங்கையை எடுத்துக் கொண்டால், அந்த நாட்டோடு, இந்தியாவின் உறவு, சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. காரணம், அங்கு தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற அத்துமீறல்கள். இலங்கையில் நடந்திருப்பது, அப்பட்டமான மனித உரிமை மீறல்கள். அதில், எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.இந்த விவகாரம், தமிழகத்தில் உணர்வுப்பூர்வமான, மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது.இலங்கை பற்றி குறிப்பிடும் போதெல்லாம், அந்நாட்டின் இறையாண்மை பற்றி இந்தியா குறிப்பிடுகிறது. இறையாண்மை பற்றி என்ன தான் குறிப்பிட்டாலும், அங்கு நடந்துள்ள அனைத்து மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்தும், தனது கவலையை தெரிவிக்க வேண்டிய நேரம் இந்தியாவுக்கு வந்து விட்டது.
@நபாளம்நேபாளத்தில், உள்நாட்டு அரசியல் குழப்பம், அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அங்கு, நிலையான, உறுதியான அரசாங்கம் அமைய வேண்டியது அவசியம். அது தான், இந்தியாவுக்கு நல்லது. வங்க தேசத்திலும் நிலைமை சரியில்லை.இந்திய பெருங்கடலில், இந்தியாவுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக திகழ்வது மாலத்தீவு. கடல் மார்க்கமாக, இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் அங்கும், நமக்கு பெரிய வரவேற்பு இருப்பதாக தெரியவில்லை.மரியாதை இல்லைஇந்திய தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபரை கூட கைது செய்கின்றனர்; இந்தியாவுக்கு மரியாதை அந்த அளவுக்கு தான் உள்ளது. இவை எல்லாமே, கவலை அளிக்க கூடிய விஷயங்கள். வெளியுறவு கொள்கை முடிவுகளில், மத்திய அரசு தோல்வி கண்டு வருகிறது.இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.
மீனவர்களை காக்க மத்திய அரசு உறுதி
கேள்வி நேரம் முடிந்ததும் எழுப்பப்படும் பிரச்னைகளுக்கான, "ஜீரோ' நேரத்தின் போது, இலங்கை ராணுவத்தினரால், சிறைபிடிக்கப்பட்டுள்ள, தூத்துக்குடி மீனவர்களை, பத்திரமாக மீட்க வேண்டுமென, தமிழக எம்.பி.,க்கள் டி.ராஜா, மைத்ரேயன், கனிமொழி ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.இதற்கு பதிலளித்து, ராணுவ அமைச்சர், கூறும் போது, ""நடுகடலில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஏற்கனவே, இதுபோல நடந்துள்ள பிரச்னைகளுக்கு, சுமுக தீர்வு காண்பதையே, மத்திய அரசு வழக்கமாக கொண்டு வருகிறது. இப்போதும், அது போல, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:
Post a Comment