Sunday, March 17, 2013

கனடா விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!

Sunday, March 17, 2013
இலங்கை::கனடா விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் விசேட பிரதிநிதி ஒருவர் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நிலைமைகளை நேரில் கண்டறியும் நோக்கில் இந்த விசேட பிரதிநிதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.கனேடிய செனட்டர் ஹக் சேகலே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜொன் பெயார்டின் விசேட பிரதிநிதியாகவே ஹக் Nசுகலே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.உண்மையைக் கண்டறியும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

ஹக், யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு விஜயம் செய்வார் எனக் குறிப்பிடப்படுகிறது.அரசாங்கத் தரப்பினரும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மனித உரிமை நிலைமைகளில் மேம்பாடு ஏற்படாவி;;ட்டால் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக கனேடிய பிரதமர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment