Monday, March 11, 2013

பந்த்' போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவா மேலிடம் முடிவு எடுக்கும் என்கிறார் மந்திரி வாசன்!

Monday, March 11, 2013
சென்னை::12ம் தேதி, தி.மு.க., நடத்தும், "பந்த்' போராட்டத்தில், தமிழக காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா, புறக்கணிக்குமா என்பது குறித்து, காங்கிரஸ் மேலிடம் முடிவை அறிவிக்கும் என, மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார்.சென்னை கோடம்பாக்கத்தில் புதியதாக துவக்கப்பட்டுள்ள அன்னை உள்ளம் முதியோர் இல்லத்தை, மத்திய அமைச்சர்

வாசன் திறந்து வைத்தார். அப்போது, நிருபர்களிடம் வாசன் கூறியதாவது:இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை, சம அங்கீகாரம் கிடைக்க, தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் மறுகுடியமர்த்தல் பணிக்காக, மத்திய அரசு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இலங்கை மனித உரிமை பிரச்னை சம்பந்தமாக ஏற்கனவே, ஐ.நா., சபை கொண்டு வந்த தீர்மானத்திற்கு, இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா ஓட்டு அளித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல் மீண்டும் பிரச்னை வருமானால், தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தகுந்த நேரத்தில் சரியான முடிவை, மத்திய அரசு எடுக்கும்.

எனவே, லயோலா கல்லூரி மாணவர்கள் தங்களது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும். வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள, "பந்த்' போராட்டத்தில், தமிழக காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா, புறக்கணிக்குமா என்பது குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி, அதற்கான முடிவு எடுத்து அறிவிக்கும்.இவ்வாறு வாசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment