Pages

Friday, March 1, 2013

இலங்கையின் முன்னாள் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. ஈழவேந்தன் அவர்களது தஞ்சக் கோரிக்கை மனு தொடர்பான மேன்முறையீட்டு விசாரணை தள்ளி வைக்கப்பு!

Friday, March 01, 2013
கனடா::இலங்கையின் முன்னாள் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது கனடாவில் வாழந்த வண்ணம் (புலிகளின்) அரசியல் விடிவிற்காக குரல் கொடுத்து வருபவருமான எம். கே. ஈழவேந்தன் அவர்களது தஞ்சக் கோரிக்கை மனு தொடர்பான மேன்முறையீட்டு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளதுகுறித்த மனு தொடர்பான மேன்முறையீட்டு வழக்கை கனடாவின் மத்திய உயர் நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி கேன் மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைத்து ஈழவேந்தன் அவர்கள் தொடர்ந்தும் கனடாவில் தங்கியிருப்பதற்;கான தற்காலிக உத்தரவை வழங்கினார்.

ஈழவேந்தன் அவர்களின் தஞ்சக் கோரிக்கை மனு முன்னர் விசாரணைகள் நடத்திய நீதிபதிகளினால் நிராகரிக்கப்பட்டு பின்னர் அவர் மேனமுறையீடு செய்திருந்தார்.

ஈழவேந்தனின் மேன்முறையீட்டு வழக்கை பிரபல குடிவரவுத்துறை சட்டத்தரணி திருமதி பாபரா ஜெக்மென் அவர் சார்பாக வாதாடி நடத்தி வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னர் ஈழவேந்தனின் அகதிக் கோரிக்கை மனுவானது நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் அவர் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அதன் மூலம்  புலிகள் அமைப்பினரோடு நெருக்கமான உறவு வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டே என்று  ஈழவேந்தன் அவர்களின் சட்டத்தரணி அலுவலகம் அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment