Pages

Tuesday, March 5, 2013

(புலிகளின் ஆதரவு) டெசோ அமைப்பு சார்பில் இன்று இலங்கை தூதரகம் முற்றுகை!

Tuesday, March 05, 2013
சென்னை::(புலிகளின் ஆதரவு) டெசோ அமைப்பு சார்பில் இன்று சென்னை இலங்கை தூதரகம் முற்றுகை செய்யப்படுகிறது. அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளி என்று உலகம் உணரச் செய்யும் வகையில் டெசோ இயக்கம் சார்பில் இன்று சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடை பெறுகிறது.

இது குறித்து ::(புலிகளின் ஆதரவு) டெசோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-​

சர்வதேச போர்க் குற்றவாளி இலங்கை இனவாத அதிபர் ராஜபக்சேவை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த முற்றுகை அறப்போருக்கு தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ரவிக்குமார் முன்னிலை வகிக்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment