Tuesday, March 19, 2013
சென்னை::தென்னிந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்கள், தமது விஜயம் தொடர்பில் சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வாட் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.தென்னிந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் இலங்கையர்கள் 00 91 44 28 24 18 96 அல்லது, 00 91 44 28 25 26 12 என்ற தொலை பேசி இலங்கங்களின் ஊடாக சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
தமிழகத்தில் இலங்கையர்களுக்கு காணப்படும் அச்சுறுத்தல்களால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
தமிழகத்தில் இலங்கையர்களுக்கு காணப்படும் அச்சுறுத்தல்களால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஏற்கனவே தமிழகத்திற்கு வருகை தரும் இலங்கையர்களின் விபரங்களை வழங்குமாறு தமிழக காவற்துறையினரும் கோரியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment