Pages

Sunday, March 17, 2013

ஜெனிவாவை வைத்துக் கூத்துக்கட்டிய (புலி)கூட்டமைப்பினரின் சோகநிலைமை:அடுத்த திருவிழாக் கூத்துக்களைக் கண்டுபிடித்து அறிவிக்க வேண்டிய அவசரத் தேவை தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கு உண்டு!

Sunday, March 17, 2013
இலங்கை::ஜெனிவாவை வைத்துக் கூத்துக்கட்டிய (புலி)கூட்டமைப்பினரின் சோகநிலைமை:அடுத்த திருவிழாக் கூத்துக்களைக் கண்டுபிடித்து அறிவிக்க வேண்டிய அவசரத் தேவை தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கு உண்டு!

ஜெனிவாவை வைத்துக் கூத்துக்கட்டிய கடந்த நாலு மாதத் திருவிழா ஏறக்குறைய முடிவடையும் கட்டம் நெருங்கிவிட்டது. என்னவாவது நடக்கும் என்று இதுவரை கொடுத்த ஏமாற்றுகளை உணர்ந்து மக்கள் கேள்வி கேட்கும் முன் அடுத்த திருவிழாக் கூத்துக்களைக் கண்டுபிடித்து அறிவிக்க வேண்டிய அவசரத் தேவை தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கு உண்டு.

இன்னும் எத்தனையாவது வருஷத்தில் நம் பிரச்சினை தீரும்… மக்கள் பழையபடி அன்னவாரமில்லாத ஒரு வாழ்க்கைக்குச் செல்வதற்கு வேண்டிய அந்தத் தீர்வுத் திட்டத்தை இனி எந்த மகாநாட்டில் வைத்துச் சர்வதேசம் அறிவிப்பதாக முடிவெடுத்துக் கலைந்திருக்கிறது என்பதையெல்லாம் ஜெனிவாவிலிருந்து திரும்பும் (புலி)கூட்டமைப்புத் தலைவர்கள் சொல்வார்கள் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள் அல்லவா?

சோகம் என்னவென்றால், அடுத்த செப்ரெம்பருக்குள் வடக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்படுமாக இருந்தால், அடுத்த வருட மார்ச் மாத ஜெனிவாத் திருவிழாவைச் சொல்லி வாக்குக் கேட்க முடியாது. குறைந்தபட்சம் தேர்தல் முடிவடைந்த உடன் ஒக்டோபரிலோ நவம்பரிலோ சர்வதேசம் இன்னுந் திறமான ஒரு பொறியைச் செய்யப்போகிறது என்று சொல்லியே மக்களை உணர்ச்சிகரமாகத் திரட்ட முடியும்.

ஆனால், இந்த ஜெனிவாவில் சர்வதேச நாடுகள் ஏமாற்றிவிட்டது மட்டுமல்லாமல், அடுத்த நாலைந்து மாதங்களுக்குள் (புலி)கூட்டமைப்பை அமெரிக்காவுக்கோ லண்டனுக்கோ டெல்லிக்கோ சும்மா கூப்பிட்டுக் கதைத்து அனுப்பினாலே இங்கு அதை வைத்து ஏதாவது நம்பிக்கைகளைப் பரவவிட்டு வெல்லப் பார்க்கலாம். அதையும் வெளிநாடுகள் செய்வார்களா என்ற எந்த உத்தரவாதமுமின்றி இருப்பது எவ்வளவு அவஸ்தை என்பதை கூட்டமைப்பினரின் நிலையிலிருந்து உணர்ந்து பார்த்தால்தான் விளங்கிக்கொள்ள முடியும்.

வரப்போகும் தேர்தலில் தமிழ் மக்கள் அவர்களை ஏகப்பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்து ஏன் அனுப்ப வேண்டும் என்று சொல்வதற்கு, தமிழ் மக்கள் நம்பக்கூடிய விதமாக ஒரு ஏமாற்றைக் கண்டுபிடிப்பதென்பது சாதாரணமல்ல. பிசுபிசுத்துப் போன இந்த ஜெனிவாத் திருவிழாவைத் திட்டவும் முடியாது. திட்டினால் சர்வதேசம் குறித்த அடுத்த நம்பிக்கையை எதிலிருந்து உருவாக்குவது? ஜெனிவாவிலிருந்து திரும்பும் கூட்டமைப்பினரின் இந்த சோகநிலைமை புரிந்துகொள்ளக் கூடியதே.

தமிழ்மக்களின் பிரதானமான அரசியலுரிமைக் கோரிக்கைகள் பற்றி தெளிவான, திட்டவட்டமான எதையும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினர் பேசுவதில்லை. பொத்தாம் பொதுவாக அரசின் மீதான பகையுணர்ச்சியைத் தூண்டிவிடும் விதமாக குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு, இராணுவ விரிவாக்கம், உயர்பாதுகாப்பு வலய விஸ்தரிப்பு, அரசு தீர்வுக்குத் தயாரில்லை போன்ற முழக்கங்களை வீசிக்கொண்டிருந்தால் போதும் என்பது அவர்கள் நிலை.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்வதற்கு, இலங்கையின் சகல தரப்பிலுமுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளும், ஏனைய சிறுபான்மை சமூகத் தலைமைகளும் வெளிநாடுகளும் நியாயமானதெனக் கருதக் கூடிய ஓர் அரசியற் கோரிக்கைத் திட்டத்தை வெளியிட அவர்களால் முடியாமலிருப்பதை மறைக்கவே இத்தகைய உணர்ச்சி ஆவேச அரசியலுக்குள் மக்களை மூழ்கடித்திருக்கிறார்கள்.

காரணம், தமிழ்மக்களின் அரசியலுரிமைகளை வழங்கக் கூடிய தீர்வும் திட்டமும் இதுதான் என்று ஒன்றைச் சொல்லக்கூடிய ஒத்த கருத்தோ ஒற்றுமையோ அவர்களிடம் இல்லை என்பதே உண்மை. தங்களுக்குள்ளே ஒற்றுமையாக ஒரு முடிவெடுத்துச் செயற்படும் திராணியின்மையை மறைக்கவே தீர்வுப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பிவிடக் கூடிய, அதன் பக்கப் பிரச்சினைகளை வெறும் கோஷங்களாக முன்வைத்து வருகிறார்கள், அவ்வளவுதான்.

No comments:

Post a Comment