Wednesday, March 6, 2013

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் அந்தோணி தகவல்!

Wednesday, March 06, 2013
புதுடில்லி::இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த வாரம் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்தும், ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா பேசுகையில்,கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கடத்தப்படும் தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்பதை உணர வேண்டும். இலங்கை படையால் மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடகிறது என கூறினார்.

கச்சத்தீவை மீட்க அ.தி.மு.க., கோரிக்கை :

அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயன் பேசுகையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படை தொடர்ந்து துன்புறுத்துகிறது. அண்மையில் 16 மீனவர்களை இலங்கை சிறைபிடித்துள்ளது. இது தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்பதே தீர்வாக அமையும் என அ.தி.மு.க., உறுப்பினர் மைத்ரேயன் கூறினார்.

இலங்கை கடற்படை தாக்குதல்:

தி.மு.க,. எம்.பி., கனிமொழி, இந்திய கடல் எல்லைக்குள் வரும் இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை தாக்குவதில்லை. ஆனால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டுவதாக கூறி தாக்குகிறது என கூறினார்.

மீனவர்களை மீட்க நடவடிக்கை:

இந்த விவாதத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் அந்தோணி, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கிறது. இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது . தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் பிரச்னை தொடர்பாக உறுப்பினர்களின் கவலைய உணர்ந்துள்ளேன் கூறினார்.

No comments:

Post a Comment