இலங்கை::ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்த மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (03) நாடுதிரும்பியதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்தது. மனித உரிமை பேரவை மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு பங்கேற்றது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த மாதம் 27 ஆம் திகதி உரையாற்றினார்.
இலங்கைக்கு எதிராக பிரேரணையொன் றைக் கொண்டு வருவதை அவர் இங்கு விமர்சித்ததோடு, அதனை சிராகரித்திருந்தார். அமைச்சர் சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவாவில் வைத்து ஏனைய நாட்டு பிரதிநிதிகளுடன் சந்தித்து இலங்கைக்கு எதிராக கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் பேச்சு நடத்திய தாகவும் அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார். அதற்கு எதிராக வாக்களிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
அமைச்சருடன் ஜெனீவா சென்றுள்ள இலங்கைக்குழுவினர் தொடர்ந்து அங்கு தங்கியுள்ளதோடு, அமைச்சர் சமரசிங்க அடுத்த வாரம் மீண்டும் ஜெனீவா செல்ல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு ஒருவாரம் தங்கியிருக்கும் அமைச்சர் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள பிரேரணைக்கு முகம்கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அதிகாரி களுடன் பேசவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதேவேளை 2012 இல் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நகர்த்தும் வகையிலே இம்முறை பிரே ரணை கொண்டுவரப்படுவதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment