Tuesday, March 5, 2013

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையில் உண்மை வெளிப்படாது:சர்வதேச விசாரணை அவசியம் சம்பந்தன்!:-(புலிகள் செய்த கொலைகளை மறந்துவிட்டு புலிகளுக்கு வக்காளத்து வாங்கும்)-(புலி)கூட்டமைப்பு சம்பந்தன்!

Tuesday, March 05, 2013
இலங்கை::மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையில் உண்மை வெளிப்படாது:சர்வதேச விசாரணை அவசியம்  சம்பந்தன்!:-(புலிகள் செய்த கொலைகளை மறந்துவிட்டு புலிகளுக்கு வக்காளத்து வாங்கும் தரம் கெட்ட அரசியல்வாதி)-(புலி)கூட்டமைப்பு பயங்கரவாதி) சம்பந்தன்!

இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐ.நா மன்ற மனித உரிமைக்கவுன்சில் கடந்த ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது இலங்கை அரசு இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலையில், இது குறித்து மீண்டும் ஒரு தீர்மானம் இந்த ஆண்டு வரும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக, தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த மாதிரி நடவடிக்கை எடுக்காததன் விளைவுகள் மீண்டும் இப்போது நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் என்று தாங்கள் எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார்.

இந்த விஷயங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு கூட்டமைப்பு தனது கருத்தை "வேண்டிய இடங்களுக்கு" தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கையின் பிரதிநிதி, மஹிந்த சமரசிங்க தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக அவரது உரை அமையவில்லை. மாறாக நிலைமையை குழப்பும் நோக்கிலேயே அது அமைந்திருக்கிறது என்றார் சம்பந்தன்.

ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையர் உரை மீது குற்றங்களை சுமத்துவதையே இந்த உரை நோக்கமாகக் கொண்டிருக்கிறது, இலங்கை அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதைப் பற்றி அது எதுவும் குறிப்பிடவில்லை என்றார் சம்பந்தன். இதை ஏனைய நாடுகள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

சர்வதேச விசாரணை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நிச்சயமாக இலங்கை அரசு, உள்நாட்டு விசாரணை மூலமாக உண்மையைக் கண்டறியும் என்று யாரும் எதிர்பார்த்தால், அவ்விதமான ஒரு விசாரணை இலங்கையில் நடைபெறுவது சாத்தியமில்லை என்றே தற்போது தெளிவாகத் தெரிவதாக அவர் கூறினார்.

அவ்விதமான உண்மையைக் கண்டறியும் விசாரணைக்கு இலங்கை அரசு எவ்வித ஒழுங்கும் செய்யவில்லை, வெறும் இராணுவ விசாரணை ஒன்றை நடத்தி, தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று அது கூறிவிட்டது இது ஒரு நம்பகமான, சுயாதீனமான விசாரணை அல்ல.

எனவே இந்த நிலையில், ஒரு சர்வதேச விசாரணைக்கு இடமுண்டு. அது இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் வந்தே தீரும், இலங்கையின் நடத்தையை வைத்துப் பார்க்கும்போது அது வருவதை யாரும் தவிர்க்கமுடியாது என்றார் -(புலி)கூட்டமைப்பு சம்பந்தன்.

No comments:

Post a Comment