Monday, March 04, 2013
நியுயோக்::இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கீமூன் தெரிவித்துள்ளார்.
நியுயோக்கில் இடம்பெற்ற இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் இலங்கை நிலவரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கு முகமாகவே அவர் இந்த கருத்தை முன்வைத்தார்.
இலங்கை தொடர்ந்தும் முன்னேற்றங்களை அடைய வேண்டும் என்றும் பொதுசெயலாளர் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு தொடர்பில் இலங்கை மேலும் பல முன்னேற்றங்களை காணவேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
இதில் உள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட இலங்கை சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment