Pages

Sunday, March 10, 2013

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்டால்தான் தீர்வு கிடைக்கும்: தொல்.திருமாவளவன்!

Sunday, March 10, 2013
சிதம்பரம்::சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது,

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என இந்திய அரசு தீர்மானம் முன்மொழிய வேண்டும். தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ராஜபக்சேயின் இனப்படுகொலையை கண்டித்து டெசோ அமைப்பின் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள மார்ச் 12-ம் தேதி பொது வேலைநிறுத்தத்தை கட்சி வித்தியாசம் பாராமல் ஒட்டுமொத்த தமிழர்களும் ஆதரிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் பிரச்னையில் சிங்களர்களிடம் ஒப்படைத்த நமது கச்சத்தீவை மீட்பதன் மூலம் தான் தீர்வு கிடைக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment