Wednesday, March 6, 2013

மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இருவரும் நான்கு இலங்கையர்களும் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

Wednesday, March 06, 2013
இலங்கை::மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இருவரும் நான்கு இலங்கையர்களும் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய முற்பட்டவேளை கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அறுவரே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி முஹமட் ஜெமில் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பினுள் முறையில் நுளைந்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தலைமன்னார், மண்திட்டு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இவர்களில் இரண்டு படகோட்டிகளும் அடங்குகின்றனர்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 1990ஆம் ஆண்டு சென்ற இலங்கையர்களே மீண்டும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் தலைமன்னார் நோக்கி வந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நான்கு இலங்கையர்களும்; மன்னாரில் எழுத்தூர் சரவண்கோட்டை, உயிர்த்தராசன்குளம், உப்புக்குளம் மற்றும் கதிர்காமர் மாவத்தை மிதிரிஹம பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கைதுசெய்யப்பட்ட இரண்டு இந்தியர்களும் இந்தியாவின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த படகோட்டிகள் ஆவார் எனவும் பொலிஸார் கூறினர்.

No comments:

Post a Comment