Pages

Tuesday, March 12, 2013

நாடாளுமன்றத்தில் வெடித்த வதேரா மற்றும் இலங்கை தமிழர் விவகாரம்

Tuesday, March 12, 2013
புதுடெல்லி::இலங்கை தமிழர் பிரச்சனை மற்றும் ராபர்ட் வதேரா மீதான நில முறைகேடு புகார் உள்ளிட்ட பிரச்சனைகளால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. மக்களவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நில முறைகேடு புகார் மற்றும் இத்தாலிய மாலுமி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என பாரதிய ஜனதா உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

திமுக உறுப்பினர்கள், இலங்கை தமிழர் பற்றி இந்தியாவின் நிலை என்ன என்பதை மத்திய அரசு கூற வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்களவை தலைவர் மீராகுமார் இதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர் அமளியால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின் 12 மணிக்கு தொடங்கிய அவையில் கூச்சல் குழப்பம் நீடித்ததால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதே விவகாரங்கள் மாநிலங்களவையிலும் எதிரொலித்தன. கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி அனுமதி அளிக்க மறுத்ததை அடுத்து, கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் அவை முதலில் 12 மணி வரையிலும், பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment