Pages

Monday, March 11, 2013

டெசோ' பந்திற்கு ஆதரவில்லை வெள்ளையன் அறிவிப்பு!

Monday, March 11, 2013
சென்னை::டெசோ' அமைப்பின் சார்பில் நடத்தப்பட உள்ள பந்திற்கு ஆதரவில்லை என, வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசில், தி.மு.க., கட்சி அமைச்சர்கள் இருந்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் தர தமிழ்நாட்டில், போராட்டம் நடத்துவது வணிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இலங்கை மீது சர்வதேச சுதந்திர விசாரணை தேவை, இன படுகொலைக்காக ராஜபக்ஷேயை கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதை தான், பேரவை வலியுறுத்துகிறது.வணிகர்கள் எடை போட தெரிந்தவர்கள். கடையடைப்பு செய்ய வேண்டும் என்று, வணிகர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்.


இவ்வாறு, அவர் தன் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.



No comments:

Post a Comment