Wednesday, March 20, 2013

இயக்குனர்களின் உண்ணாவிரதம் முடித்து வைத்தார் சரத்குமார்!

Wednesday, March 20, 2013
சென்னை::இலங்கையில் (புலிகளின்) ஈழம் மலர்வதற்கு வழி பிறந்து விட்டது என்று நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமார் கூறினார். இதுபற்றிய விபரம் வருமாறு:-

இலங்கை போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கண்டித்தும், ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளன. இந்த சூழலில் அரசியல் கட்சிகளின் போராட்டம் ஒரு பக்கமிருந்தாலும் மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் (புலிகள் ஆதரவு) உண்ணாநிலை போராட்டம் நடந்தது.

இதில் திரைப்பட இயக்குனர் அமீர் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், எஸ்.பி.முத்துராமன், பாலா, பாலுமகேந்திரா, இசைஞானி இளையராஜா, பெப்ஸி சிவா, பாலாஜி சக்திவேல், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.சுந்தர்ராஜன், சிம்புதேவன்,பொன்வண்ணன்,கெளதம் வாசுதேவன், மனோபாலா, சுகாசினி, கருணாஷ், ஆர்.பாண்டியராஜன், வஸந்த், சசிகுமார், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ராஜ்கிரண், இயக்குனர் ஷங்கர்,பேரரசு, கே.வி.ஆனந்த், மன்சூர் அலிகான், சினேகன், நா.முத்துக்குமார், தாமரை, புகழேந்தி, தங்கராஜ், சரண், எஸ்.ஓ.சி., கலைப்புலி தாணு, கே.ஆர்., சுசீந்திரன், அறிவுமதி, நடிகர்கள் சிபிராஜ், பிரசன்னா, விமல், ராதாரவி, கரு.பழனியப்பன் என 500-க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நிறைவாக பழ.நெடுமாறன், நல்லக்கண்ணு, நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமார் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தனர்.

அமீர் பேசியதாவது:-

இலங்கையில் காலம் தாழ்ந்து நடந்த தவறுகளை நிகழ்காலத்தில் சரி செய்ய வேண்டும். உலக மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலி மத்திய அரசுக்கு ஏன் புரியவில்லை. இலங்கையில் நடந்த கொடூரம் கண்டு உலகளவில் தமிழ் மக்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள். இதில் அரசியல் இல்லை. தன் இன எழுச்சி, இன உணர்வு எழுந்திருக்கிறது. ஜெனீவாவில் எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டாலும் எங்களது போராட்டம் தொடரும். ஈழத் தமிழர்களுக்காக போராட்டக் களத்தில் குதித்திருக்கும் அனைவருக்கும் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்னர் சரத்குமார் பேசியதாவது:-

இலங்கையில் (ஈழம்) மலரப்போவது உண்மை. அதற்கான வழி பிறந்து விட்டது.இலங்கை (ஈழ) மக்களுக்கு ராஜபக்சே செய்த கொடூரத்தை கண்டித்து ஐ.நா.வில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிற வகையில் இந்த போராட்டம் அழுத்தம் கொடுத்திருக்கிறது. தமிழக மக்கள் தங்கள் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சிறுபிள்ளை பாலசந்திரன் குண்டடிப்பட்டு சாய்ந்து கிடந்த படங்கள் மக்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதை பார்த்த பிறகு இந்த எழுச்சி. இதற்கு நிச்சயம் விடை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment