Pages

Sunday, March 10, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு: வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம!

Sunday, March 10, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. நகல் தீர்மானம் ஆராயப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

தீர்மானம் தொடர்பில் ஆராய்ந்து குறித்த குழு பரிந்துரைகளை முன்வைக்கும் எனவும், அதன் அடிப்படையில் அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்தில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடாத்தல், குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை ஒன்றை உருவாக்குதல் போன்ற பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தேச தீர்மானம் தொடர்பில் ஆராய்ந்து எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment