Pages

Sunday, March 17, 2013

இலங்கையில் இந்திய தூதரகம் மூட கோரிய மனு தள்ளுபடி!

Sunday, March 17, 2013
மதுரை::இலங்கையில், இந்திய தூதரகத்தை மூட, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை, தள்ளுபடி செய்தது.

மதுரை மாவட்ட, இந்து மக்கள் கட்சி தலைவர், சோலை கண்ணன் தாக்கல் செய்த மனு: இலங்கையில் டிச., முதல் ஜன., வரை, 367 இந்து கோவில்களை இடித்து, அப்பகுதிகளில் புத்த மத கோவில்களை கட்டியுள்ளனர். தமிழர்கள் வசிக்கும், 89 கிராமங்களுக்கு, சிங்கள பெயர்கள் சூட்டியுள்ளனர். தமிழர் பகுதிகளில், 750 ராணுவ முகாம்கள் உள்ளன. இதுவரை, இலங்கை கடற்படை, 1,000 இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளது. அங்கு மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. எனவே, இந்திய தூதரகம் இருக்க அவசியமில்லை. கோவில்களை இடித்தவர்கள் மீது, சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும்.

இதை வலியுறுத்தி, ஜன., 21ல், மத்திய கேபினட் செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு, மனு அளித்தேன். இலங்கையிலுள்ள இந்திய தூதரை, திரும்ப பெற வேண்டும். இந்திய தூதரகத்தை மூட, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த, நீதிபதிகள், ஏ.செல்வம், எம்.சத்திய நாராயணன், "பெஞ்ச்' மனுவை தள்ளுபடி செய்தது.

No comments:

Post a Comment