Pages

Tuesday, March 5, 2013

உதயகுமார் தலைமையில் இலங்கை அரசை கண்டித்து இடிந்தகரையில் ஆர்ப்பாட்டம்!

Tuesday, March 05, 2013
ராதாபுரம்::கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் அணு உலை எதிர்ப்பாளர்கள் நேற்று இலங்கை அரசை கண்டித்து இடிந்தகரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசியதாவது:-

தமிழர்களுக்காக தமிழர்கள் உண்மையாக ஒளிவுமறைவின்றி குரல் கொடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களின் விசயத்தில் தமிழர் கட்சிகள் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசு தமிழர்களை அலட்சியம் செய்து வருகிறது.

அணுமின் நிலைய பிரச்சினை தொடங்கி ஒவ்வொரு விஷயத்திலும் தமிழர் மீது மத்திய அரசு பாராமுகத்துடனும், பாதகமாகவும்தான் நடந்து வருகிறது. தமிழ் மக்களின் அனைத்து கோரிக்கைகளுக்காகவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் உரத்த குரல் எழுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment