Saturday, March 16, 2013
இலங்கை::இலங்கை அரசாங்கம் மீது யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்துகின்ற நிழற்படம் மற்றும் காணொளி ஆகியன தமக்கு கிடைத்துள்ளதாக பீ.பீ.சி உலக சேவை தெரிவித்துள்ளது.
இதுவரை வெளியிடப்படாதவை எனக் கருதப்படும் நிழற்படம் மற்றும் காணொளி ஆகியன லண்டனை தலைமையகமாக கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவையால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பீ.பீ.சி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை இராணுவ வீரர் ஒருவரிடமிருந்து இந்த நிழற்படமும் காணொளியும் எவ்வித பணமும் செலுத்தப்படாமல் தமது பேவையினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக உலகத் தமிழர் பேரவை பீ.பீ.சிக்கு கூறியது.
தமிழக தொலைக்காட்சி ஒன்றில் இந்த நிழற்படம் மற்றும் காணொளி ஆகியன ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டுள்ளதாகவும் பீ.பீ.சி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இராணுவத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் வெளியாகின்ற இந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லையென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவிக்கின்றார்.
பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை இராணுவத்தினர் மீட்டெத்த செயற்பாட்டையும் யுத்த வெற்றியையும் குறைத்து மதிப்பிடும் வகையில் ஊடகப் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய குற்றச்சாட்டுக்களை சாட்சிகளுடன் நிரூபிக்க முடியுமாயின் அவற்றை ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுவதுடன் மாத்திரமின்றி அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.
No comments:
Post a Comment