Monday, March 11, 2013
சென்னை:.இலங்கை தமிழர்களுக்கு (புலிகளுக்கு) ஆதரவாக உண்ணாவிரதம் இருந்து வரும், மாணவர்களை சந்திக்க சென்ற தங்கபாலு மீது, கற்கள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் நடந்த, கொலைக்கு, சர்வதேச விசாரணை நடத்துவது உட்பட, எட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி, லயோலா கல்லூரி மாணவர்கள், கோயம்பேட்டில்
(புலிகளுக்கு) ஆதரவாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.மாணவர்களை சந்திக்க, நேற்று மாலை, தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு சென்றார். அவருக்கு அனுமதி மறுக்கவே, "நானும் தமிழன் தான்' என, சொல்லி கொண்டே, உள்ளே செல்ல தங்கபாலு முயன்றார். உடனே, எதிர்ப்பாளர்கள், தங்கபாலுவை வெளியில் செல்லுமாறு கோஷமிட்டனர். தங்கபாலு வெளியேற மறுக்கவே, அங்கிருந்தவர்கள் தங்கபாலு மற்றும் அவருடன் சென்ற ஆதரவாளர்கள் மீது, அழுகிய தக்காளி, வெங்காயம், கற்கள் மற்றும் செருப்புகளை வீசினர்.
இதில், காங்கிரஸ் கட்சி சேர்ந்த தாமோதரன் மீது, கற்கள் விழுந்ததில் காயமடைந்தார். இதை கண்டித்து, தங்கபாலு ஆதரவாளர்கள், திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
பிரச்னை முற்றுவதை தடுக்க, தங்கபாலுவை திரும்பிச் செல்ல போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து, வெளியேறினார் தங்கபாலு. பின் நிருபர்களிடம், ""மாணவர்களின்
போராட்டத்தின் பின், புலிகளுக்கு ஆதரவாக பெரிய சதி கும்பல் செயல்படுகிறது,'' என்றார்.

No comments:
Post a Comment