Thursday, March 07, 2013
இலங்கை::தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்ளவும் இல்லை. துப்பாக்கி சூடு நடத்தவும் இல்லை என்று கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் இந்திய, தமிழக மீனவர் ஒரு படுகாயமடைந்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எமது கடற்படையினர் அவ்வாறான காரியங்கள் ஈடுபடுவது இல்லை. இது உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என்றார்.

No comments:
Post a Comment