Thursday, March 14, 2013
இலங்கை::பிரித்தானியாவில் உள்ள எந்த தொலைக்காட்சிக்கும் இல்லாத நிலைப்பாடுகளை கொண்டு செயற்பட்டு, இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கும் செனல் 4 தொலைக்காட்சிக்கு இலங்கை வெற்றிகரமான பதிலை வழங்கியிருப்பதாக தினமின தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் இணக்கப்பாடுகளுக்காக பிரித்தானிய மகாராணி கையெழுத்துள்ளமை சம்பந்தமான செய்தியை பின்னணியாக கொண்டு செனல் 4 தொலைக்காட்சி, இலங்கையில் நல்லாட்சி இல்லை எனவும் மனித உரிமை மீறப்படுவதாக கூறி, தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் தூதுவர் மருத்துவர் கிரிஸ் கோனிஸ் பதிலளித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மகாராணி கலந்து கொண்ட வைபவம் ஒன்றில் அங்கு பேசப்பட்ட விடயங்களை மீறிச் சென்று, பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடத்துவது பொருத்தமற்றது எனக் கூறி பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தி அந்த தொலைக்காட்சி கடும் முயற்சிகளை எடுத்துள்ளது. இதன் போது, இலங்கை தூதுவரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
வைபவத்தில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா தனது மனைவியுடன் கலந்துகொண்டார். அவரிடம் கேள்விகளை தொடுக்க செனல் 4 முயற்சித்துள்ள போதிலும் இது வெற்றியளிக்கவில்லை. அப்போது அங்கு சென்ற இலங்கை தூதுவர் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாக பதிலளித்துள்ளார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment