Monday, March 11, 2013
இலங்கை::அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் 4ம் சரத்து ஆபத்தானது என மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மஹானாமாஹேவா தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அமெரிக்கா இலங்கை தொடர்பில் தீர்மானமொன்றை முன்வைத்துள்ளது.
இந்தத் தீர்மானத்தின் நான்காம் காரணி நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
ஏதேனும் ஓர் காரணத்தினால் இந்தத் தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டால், நாட்டுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும்.
நாட்டில் ஏற்படக் கூடிய குழப்ப நிலைமைகளின் போது அரசாங்கத்தின் அனுமதியின்றி குழுவொன்றை அனுப்பி விசாரணை நடாத்தக் கூடிய வகையில் தீர்மானத்தின் நான்காம் காரணி அமைந்துள்ளது என மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment