Saturday, March 09, 2013
இலங்கை::கடந்த மாதம் 12ம் திகதி கொம்பனித் தெரு பகுதியில் வைத்து வர்த்கர் ஒருவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாவை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை ஊடகப்பிரிவு இந்த தகவலை வழங்கியுள்ளது.
கைதானவர்களுள் 3 காவற்துறை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் இருவர் காவற்துறை போக்குவரத்து பிரிவில் பணியாற்றுவதுடன், ஒருவர் அமைச்சுப் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுகிறார்.
இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மேற்படி 7 நபர்களும் கொழும்பின் பலபகுதிகளிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்
மேற்படி கும்பல் கொள்ளையடித்த பணத்தின் ஒருபகுதி மீட்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி தொகையை மீட்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment