Thursday, March 14, 2013
இலங்கை::இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ராமேஸ்வரம் மீனவர்கள் அனைவரும் இன்று மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
19 மீனவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு
தலைமன்னாருக்கு அழைத்து வரப்பட்டதாக அதன் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
4 ட்ரோலர் படகுகளில் வந்த மீனவர்கள் தலைமன்னார் - ஊருமலை பகுதியில் இருந்து 9 கிலோமீற்றர் தொலைவில் வடமேற்கு திசை கடற்பிராந்தியத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, கடந்த 3 ம் திகதியும் இலங்கை கடற்பிராந்தியத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 16 பேர் 3 படகுகளுடன் கல்பிட்டியவில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


No comments:
Post a Comment