Pages

Sunday, March 3, 2013

ஊர்காவற்துறைப் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமொன்றில் படையினர் ஆறு பேர் காயம்!

Sunday, March 03, 2013
இலங்கை::ஊர்காவற்துறைப் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமொன்றில் படையினர் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்து ஆறு பேரும் தற்போது யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதோடு யாருக்கும் எவ்வித உயிர் ஆபத்தும் ஏற்படவில்லையென கடற் படை பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கடற்படை ஆயுத பயிற்சியில் ஈடுட்டிருந்த வேலணை கடற்படை முகாமைச் சேர்ந்த ஆறு படைவீரர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

குண்டு வெடிக்கவைத்ததன் பின்னர் அந்த குழலின் பின்பக்கத்திலிருந்து வெளியாகிய தீயினாலேயே இந்த ஆறு பேரும் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் நான்கு பேருக்கு கடும் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏவப்பட்ட குண்டு பனை மரத்தில் வீழ்ந்து வெடித்துள்ளது என்றும் கடற்படைப்பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment