Pages

Monday, March 18, 2013

இலங்கைக்கு எதிராக இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் 1000 பேர் கைது!

Monday, March 18, 2013
சென்னை::சென்னையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுங்கம்பாக்கத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற 300 மாணவர்களை போலீஸ் கைது செய்தது. கைதான அனைவரும் கே.கே.நகர் மீனாட்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆவர். இலங்கைக்கு எதிராகத் தனித் தீர்மானம் கொண்டுவர புலிகளின் ஆதரவாளர்கள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற 500 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனம்பாக்கம் விமானநிலையம் முன் மாணவர் மறியலால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 400 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான புலிகளின் ஆதரவு  மாணவர்கள் போராட்டம் தீவிரம்:தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

சென்னை::தமிழகத்தில் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், இலங்கை அரசிற்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது. இலங்கையில் போர் குற்றங்களுக்கு எதிராக அரசியல் கட்சிகளை தொடர்ந்து புலிகளின் ஆதரவு  மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் 8வது நாளாக சட்ட கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் பெரியார் பல்கலை கழக மாணவர்கள் 17 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். திருச்சியில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கறுப்பு பேட்ச் அணிந்து வகுப்புகளுக்கு சென்றனர்.

இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர் குற்றவாளி என அறிவிக்க கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, ஐ.நா. கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி மாணவர்கள் இன்றும் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இலங்கைக்கு இந்தியா பொருளாதார தடைவிதிக்க வேண்டும், போர் குற்றவாளியான ராஜபக்சேவிற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே மாணவர்களின் போராட்டம் காரணமாக தமிழக அரசு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அளித்தது. கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தாலும் தங்களின் போராட்டம் தொடரும் என மாணவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment