Sunday, March 10, 2013

இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு: ஜி.கே.வாசன் பேட்டி!

Sunday, March 10, 2013
சென்னை::இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார்.

கோடம்பாக்கத்தில் அன்னை உள்ளம் முதியோர் இல்ல கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அப்போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை, சமஅந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறுகுடியமர்த்தல், மறுவாழ்வு பணிக்காக மத்திய அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.

இலங்கை மனித உரிமை பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே ஐ.நா.சபை கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்து உள்ளது. அதே நிலையில் மத்திய அரசு தொடர்ந்து இருக்கும். தமிழர்கள் உணர்வுகளை மத்திய அரசு உணர்ந்து செயல்படுகிறது. தக்க நேரத்தில் சரியான முடிவு எடுக்கும்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா சஸ்பெண்டு விவகாரத்தில் புதியக்கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் கிடையாது. அப்படி பேசுவது தவறானது.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

No comments:

Post a Comment