Monday, February 25, 2013

இலங்கைக்கு எதிராக இந்திய செயற்படும் - இந்திய மத்திய அமைச்சர் வீ. நாராணய சாமி!

Monday, February 25, 2013
சென்னை::சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான செயற்பபோவதாக இந்தியா அறிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்திற்கு பொறுப்பான இந்திய மத்திய அமைச்சர் வீ. நாராணய சாமி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்தியன்ஸ் டைம்ஸ் என்ற சஞ்சிகைக்கு அவர் அளித்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் உறுதி மொழி அளித்துள்ளார்.

இந்த நிலையில் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில் இந்தியா ஆதரவளிக்கும் என்றும் இந்திய மத்திய அமைச்சர் வீ. நாராணய சாமி குறிப்பிட்டுள்ளார்...

ஏற்கெனவே ஐ.நா.சபையில் நல்லெண்ணக் குழு இலங்கையில் பார்வையிட்டு ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது. அப்போது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்போது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

ஐ.நா.சபையில் இலங்கை தொடர்பான விவாதம் மீண்டும் ஏப்ரல் மாதம் வர உள்ளது. அப்போது இலங்கை எதிராக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் உட்பட தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment