Saturday, February 16, 2013
இலங்கை::வெளிநாட்டு பணத்தை ஆடைகளுக்குள் மறைத்து நாட்டிலிருந்து எடுத்துச் செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை இவர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இந்தியாவின் டில்லி நோக்கி பயணிக்க முற்பட்டுள்ளனர்.
இவர்களின் உள் ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 64 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றில் யூரோ, சுவிஸ் பிராங் மற்றும் பல்வேறு வெளிநாட்டு நாணயங்களும் அடங்குவதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
களியாட்ட விடுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் கைது!
கொழும்பு தும்முல்லை இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய காவற்துறையினர், சந்தேகத்தின் பேரில் ஐவரை கைது செய்துள்ளனர்.
காதலர்தினத்தை முன்னிட்;டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டிருந்தபோது இடம்பெற்ற மோதலின் போது, கொழும்பு பான்ஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் சுரேன் என்ற 27 வயது இளைஞர் கொல்லப்பட்டார்.
இது தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் நேற்றையதினம் கொல்லுபிட்டி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கொழும்பு 15, கொழும்பு 12, கொழும்பு 14, மாலிகாவத்தை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கொல்லுபிட்டி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

No comments:
Post a Comment