Tuesday, February 19, 2013
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் தேசிய செயற்திட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்தில் இந்தக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்தில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சகல ஆக்க பூர்வமான பரிந்துரைகளையும் உள்ளடக்கும் வகையில் தேசிய செயற்திட்டம் அமையவில்லை என குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த சனத்தொகைக்கும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
சட்டவிரோத படுகொலைகள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடாத்துதல், வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், பக்கச்சார்பற்ற வகையில் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறிமுறைமை ஒன்றை உருவாக்குதல், கைது தொடர்பான கொள்கைளை மீள் பரிசீலனை செய்தல், மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுதல், கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்தல் போன்ற பல்வேறு காத்திரமான பரிந்துரைகள் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment