Pages

Thursday, February 28, 2013

முகேஷ் அம்பானிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்!

Thursday, February 28, 2013
மும்பை::பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். அதில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை ஆதரிப்பது மற்றும் குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்தி கொள்ளாவிட்டால் முகேஷ் அம்பானியையும், அவரது 27 மாடி வீட்டையும் தாக்குவோம் என்றும், தங்களது கூட்டாளியான டேனிஷ் என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

டேனிஷ் பீகாரைச் சேர்ந்தவன். தீவிரவாதி பட்கலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டான். மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மர்ம நபர் மூலம் இந்த கடிதம் மும்பை ரிலையன்ஸ் அலுவலகத்துக்கு வந்தது. கடிதம் கொடுத்து சென்றவரையும் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment