Pages

Monday, February 18, 2013

இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து ராமேசுவரத்தில் (புலிகள் ஆதரவு மன நோயாளி) மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்!

Monday, February 18, 2013
ராமேசுவரம்::கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதோடு, மீனவர்களும் பிழைப்பு நடத்துவதே மிகவும் கஷ்டமாகி உள்ளது. ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீண்டும் கரைக்கு திரும்புவோமா? என்ற அச்சத்துடனே மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்தும், இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரியும் டெசோ அமைப்பு சார்பில் ராமேசுவரத்தில் இன்றும் (18-ந் தேதி), நாளை நாகையிலும் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை டெசோ அமைப்பு சார்பில் ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. பொருளாளர் (புலிகள் ஆதரவு மன நோயாளி)மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். திராவிடர் கழக தலைவர் (புலிகள் ஆதரவு மன நோயாளி) கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் (புலிகள் ஆதரவு மன நோயாளி) தொல். திருமாவளவன் எம்.பி., திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் (புலிகள் ஆதரவு மன நோயாளி) சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுப.தங்கவேலன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுப.த.சம்பத், மாவட்ட துணைச்செயலாளர் அகமது தம்பி, நயினார் கோவில் ஒன்றிய செயலாளர் சுப.த. திவாகரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பொன். துரைச்சாமி, ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளர் லாந்தை முனியசாமி, ராமேசுவரம் நகர் செயலாளர் நாசர்கான், நகர் துணைச்செயலாளர் வில்லாயுதம், நகர் மாணவரணி அமைப்பாளர் ஜெயராமன், தொண்டர் படை துணை அமைப்பாளர் காளேஸ்வரன், தொண்டரணி வளவன் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மீனவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நடைபெற்றதால் இதில் பங்கேற்றவர்கள் தங்கள் சார்ந்த கட்சி கொடியை கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment