Thursday, February 14, 2013

திருகோணமலை சிறைச்சாலை கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது!

Thursday, February 14, 2013
இலங்கை::திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்ல முயற்சித்தபோது கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 85 பேர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர்.

நீண்டகாலமாக தாம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை கண்டிக்கும் வகையில் கைதிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஸ்குமார் கூறினார்.

கைதிகளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து போராட்டத்தைக் கைவிடுவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைதிகளின் கோரிக்கைகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் எனும் உறுதிமொழியை அடுத்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment