Friday, February 22, 2013

வெளிநாடுகளில் புகலிடம் கோரும் நபர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது குடியுரிமை தொடர்பிலான சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது!

Friday, February 22, 2013
இலங்கை::வெளிநாடுகளில் புகலிடம் கோரும் நபர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது குடியுரிமை தொடர்பிலான சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது

வெளிநாடுகளில் புகலிடம் கோரும் நபர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.குடியுரிமை தொடர்பிலான சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைப் பிரஜைகள் வேறும் நாடுகளில் புகலிடம் கோரினால் அவர்களின் இலங்கைக் குடியுரிமை ரத்து செய்யப்படும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார். குடியுரிமை வழங்குவது குறித்த சட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுததப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டுச் சென்று புகலிடம் பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு, குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். நிச்சயமாக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது.

இதேவேளை, இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பான விண்ணப்பங்கள் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2011ம் ஆண்டு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் 750 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.குடியுரிமை சட்டங்களில் திருத்தம் செய்வது குறித்த யோசனைக்கு அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment