Pages

Thursday, February 14, 2013

ஐக்கிய நாடுகள் சபை குற்றச்சாட்டுக்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்போம் நவிபிள்ளைக்கு: கெஹலிய ரம்புக்வெல்ல பதிலடி!

Thursday, February 14, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபைக்கு மதிப்புமிகுந்தவற்றை நிறைவேற்றாவிடினும் அரசாங்கத்திற்கு மதிப்புமிகுந்த அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல் ஊடகத்துறை அமைச்சருமாகிய கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


ஐநா மனித உரிமை கவுன்ஸில் ஆணையாளர் நவிபிள்ளை இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் இன்று (14) கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற கிடைத்த வாய்ப்பை இலங்கை நழுவவிட்டுள்ளதாக நவநீதம்பிள்ளை அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும் சுயாதீன நாடு என்ற அடிப்படையில் முடிந்தவற்றை நிறைவேற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது அதற்கு அச்சமின்றி முகங்கொடுக்கத் தயார் எனவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்தால் நாட்டின் காணி வெளிநாட்டவருக்கு விற்கவோ குத்தகைக்கு விடப்படவோ இல்லை எனவும் ஏதேனும் வரிக்கு உட்பட்டு குறிப்பிட்ட சில காலத்திற்கு மாத்திரம் முதலீட்டுக்காக காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

No comments:

Post a Comment