Pages

Thursday, February 14, 2013

ஜெயலலிதா பற்றி அவதூறு: விஜயகாந்த், இளங்கோவன் நேரில் ஆஜராக வேண்டும் என முதன்மை செசன்சு கோர்ட்டு உத்தரவு!

Thursday, February 14, 2013
சென்னை::கேப்டன் டி.வி.யில் 26.10.2012 அன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேட்டி ஒளிபரப்பானது. அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதையடுத்து விஜயகாந்த் மீது முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அரசு வக்கீல் ஜெகன் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பொன்.கலையரசன், இந்த வழக்கில் வருகிற 26.4.2013 அன்று விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இதேபோல புதிய தலைமுறை தொலைக் காட்சியில் 23.11.2012 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பேட்டி ஒளிபரப்பானது. அதில், தமிழ்நாட்டில் அரசு ஒப்பந்த பணிகள் நடை பெறுவதற்கு 12 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என்று கூறி இருந்தார்.

இதையடுத்து இளங்கோவன் மீது சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கை அரசு வக்கீல் ஜெகன் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொன்.கலையரசன், 25.4.2013 அன்று இளங்கோவன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment