இலங்கை::அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக பயணிக்க முற்பட்ட ஏழு பேர் கல்முனையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் முல்லைத்தீவிலிருந்து கல்முனைக்கு வருகைதந்த போது கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு பயணிக்கவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பஸ் வண்டியொன்றில் கல்முனைக்கு வருகைதந்த சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment