Pages

Monday, February 25, 2013

இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த வேண்டுமாயின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் - பிரித்தானியா!

Monday, February 25, 2013
ஜெனீவா::இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த வேண்டுமாயின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் இன்று  ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானியாவின் அரச, வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் பெரனைஸ் சைடா வாசி இவ்வாறு வலியுறுத்தினார்.

இலங்கை தொடர்பில் பிரித்தானியாவும் ஏனைய நாடுகளும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு தற்போது வலுவான திட்டமொன்று தேவைப்படுவதாக பிரித்தானியாவின் அரச, வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் பெரனைஸ் சைடா வாசி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment