Thursday, February 21, 2013
இலங்கை::எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகள் மாத்திரம் இந்த மாநாட்டிற்காக பங்கேற்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் தமது அமைச்சின் அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது தொடர்பாக இன்றைய தினம் மேலும் ஒரு பேச்சுவார்தை இடம் பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் அரசாங்கம் முகங் கொடுக்க தயார் எனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க இந்தக் குழுவிற்கு தலைமை தாங்குவார்.

No comments:
Post a Comment