Monday, February 18, 2013
இலங்கை::சுற்றுலா விசாவில் இலங்கை வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று இந்தியர்கள் இன்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழ் நாட்டை சேர்ந்த இந்த மூன்று பேரும் ஒலுவில், பாலமுனை - முள்ளிக்குளத்து வயல் பிரதேசத்தில் இன்று நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்தியர்களை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments:
Post a Comment