Pages

Monday, February 18, 2013

நவநீதம்பிள்ளை இலங்கை விடயத்தில் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறார் - ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல்ல!

Monday, February 18, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை விடயத்தில் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறார் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது என அரசாங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

மனித உரிமை ஆணணாயளர் என்ற உயர் பதவியிலிருந்துகொண்டு அவர் இலங்கை மீது குற்றம் சுமத்துவதிலேயே குறியாக செயல்பட்டு வருகிறார் என அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும், எந்த விதமான சவால்களுக்கும் இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் முகங்கொடுக்கும் எனவும் அவற்றை எதிர்கொள்வதற்கான இயலுமை இலங்கைக்கு உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தகால பிரச்சினையின் முடிவில் உடனடியாக மெஜிக் காட்ட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மஉpத உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள அறிக்கை குறித்து விபரிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கண்டனங்களை கவனத்திற் கொள்வதில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்ட நவநீதம்பிள்ளை சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையும் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் என்ற உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு நவநீதம்பிள்ளை இவ்வாறு இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டும் என்பதிலேயே குறியாக செயல்பட்டு வருகிறார்.

நவநீதம்பிள்ளை இவ்வாறு இலங்கைக்கு எதிராக திட்டமிட்ட ரீதியிலும், நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலும் செயல்பட்டு வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டுள்ள நிலையில் அது குறித்து அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

மாறாக ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் விடுக்கப்படுகின்ற அனைத்து சாவல்களுக்கும் முகம்கொடுப்பது எமது நிலைப்பாடாகம். நாங்கள் சவால்களுக்கும் புதிய நிலைமைகளுக்கும் முகங்கொடுப்போம். அவற்றை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம். இதற்காக நாங்கள் தயாராகி வருகின்றோம் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment