Pages

Saturday, February 23, 2013

இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் பாராட்டியுள்ளது!

Saturday, February 23, 2013
இலங்கை::இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் பாராட்டியுள்ளது.நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மியன்மார் படகுப் பயணிகளை மீட்டு அவர்களுக்கு தேவையான அவசர முதலுதவிகளை வழங்கியமை பாராட்டுக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா நோக்கிப் படகில் பயணிக்க முயற்சித்த குறித்த மியன்மார் பிரஜைகளில் 90க்கும் மேற்பட்டவர்கள் பட்டினி மற்றும் ஏனைய நோய்களினால் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கைக் கடற்பரப்பிற்குள் நிர்க்கதியான நிலையில் காணப்பட்ட மியன்மார் பிரஜைகளை அவசரமாக மீட்டு அவர்களுக்கு தேவையான முதலுதவிகளை கடற்படையினர் வழங்கியுள்ளனர்.

இவ்வாறான பணிகளின் போது இலங்கைக்கு முழுமையான ஆதரவினை வழங்கத் தயார் என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பேச்சாளர் அன்ட்ரிஜ் மாசீக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment