Monday, February 18, 2013

கடற்படையினரால் நெடுந்தீவு மாணவர்களுக்கு நிழற்பிரதி இயந்திரம் அன்பளிப்பு!

Monday, February 18, 2013
இலங்கை::நெடுந்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரிக்கு கடற் படைத்தளபதி வைஸ் அட்மிரால் ஜயநாத் கொலம்பகே அவர்களால் நிழற்பட பிரதி இயந்திரமொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இவ் அன்பளிப்பானது, அன்மையில் இடம்பெற்ற கடற்படைத்தளபதியின் வட பகுதிக்கான விஜயத்தின்போது வழங்கப்பட்டது.

வட பிராந்தியத்தின் கல்வி மேம்பாட்டுத் திட்டத்திற்கமைய வழங்கப்பட்ட இவ் அன்பளிப்பின் மூலம் அக்கல்லூரியின் நீண்டகாலமாக நிலவி வந்த நிழற்பிரதி இயந்திரத்தின் தேவைப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டது. கடற் படையினரின் கல்வி மேம்பாட்டுக்கான இவ்வுதவிக்காக கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் தமது மனப்பூர்மான பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment