Tuesday, February 19, 2013

இலங்கை கடற்படையை கண்டித்து நாகையில் (புலிகளின் ஆதரவு டெசோ நாடக கம்பெனி) மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்!

Tuesday, February 19, 2013
நாகப்பட்டினம்::தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க மத்திய அரசு இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரியும் (புலிகளின் ஆதரவு டெசோ நாடக கம்பெனி) அமைப்பு சார்பில் ராமேசுவரம், நாகையில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி நேற்று ராமேசுவரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று நாகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப. வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஏ.கே.எஸ். விஜயன் (நாகை) பூண்டி கலைவாணன் (திருவாரூர்) எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் (கடலூர்) பெரியண்ணன் அரசு (புதுக்கோட்டை) முன்னாள் அமைச்சர் மதிவாணன், அழகு திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கோவி. செழியன்,டி.ஆர்.பி. ராஜா காரைக்கால் எம்.எல்.ஏ. நாஜிம், முன்னாள் எம்ல்.ஏ.க்கள் கல்யாணம், அன்பழகன், சீர்காழி பன்னீர் செல்வம் டாக்டர் பன்னீர் செல்வம், ஜெகவீர பாண்டியன், மீனாட்சி சுந்தரம், நாகை நகர செயலாளர் பன்னீர், மாவட்ட அவைத்தலைவர் குமரவேல், பொருளாளர் திருமலை சாமி, துணை செயலாளர்கள் ஞானசேகரன், இளஞ்செழியன், இறை எழில் மற்றும் ஏராளமான தி.முக. வினர் கலந்து கொண்டனர்.

மேலும் நாகை ஒன்றிய தி.மு.க செயலாளர் ராஜேந்திரன், திருமருகல் ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி,திராவிடர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை அமைப்பு நிர்வாகிகள், மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment