Monday, February 18, 2013

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் குறித்து அரசாங்கம் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு உவிளக்கம்!

Monday, February 18, 2013
இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் மற்றும் அமுலாக்கம் தொடர்பில் அரசாங்கம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை விசேட விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22ம் அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறு வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் தேசிய செயற்திட்ட அமுலாக்கம் n;தாடர்பில் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பாரியளவு முன்னேற்றமடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் இந்த விடயங்கள் குறித்து வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு பூரண விளக்கம் அளிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக் எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து இன்னமும் ஆராயவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, இந்த அறிக்கை பற்றிய தகவல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.தீர்மானம் தொடர்பில் ஆராய்ந்து அதன் பின்னர் கருத்துக்கள் வெளியிடப்படும் என அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment